ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: வருவாய் உதவியாளர்களுக்கு வழங்குவது போல் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6750 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகாயி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சதானந்தி, மாநில துணை பொது செயலாளர் சுப்புக்காளை கோரிக்கைகளை விளக்கி பேசினர்.