உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேவதானம் கோயில் வைகாசி தேரோட்டம்

தேவதானம் கோயில் வைகாசி தேரோட்டம்

சேத்துார்: தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.தேவதானத்தில் தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக நச்சாடை தவிர்த்த அருளிய சுவாமி கோயில் உள்ளது. மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. 9ம் நாளான நேற்று காலை பிரியாவிடை உடன் அம்மையப்பர் பெரிய தேரிலும் அன்னை தவம் பெற்ற நாயகி சிறிய தேரிலும் எழுந்தருள தேரோட்டம் நடந்தது.தென்காசி எம்.பி., ராணி, எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் தேரினை வடம் பிடித்து தேரோட்டத்தை துவங்கி வைத்தனர். தேருக்கு பின்னால் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் தடத்தில் கும்பிடு கர்ணம் எனும் அங்க பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை