உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி

சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் அகத்தர மதிப்பீட்டு மையம் சார்பில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். அகத்தர மதிப்பீட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் பிரியா வரவேற்றார்.தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு பேசியதாவது, ஆசிரியர்கள் வாசித்தல், எழுதுதல், பேசுதல், கேட்டல், புரிந்து கொள்ளுதல், பங்கேற்றல் ஆகிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூகத்தை எதிர்கொள்ளுதல், வாழ்க்கை திறன்களை உணர்தல், தெளிதல், எதிர்காலத்தை நல்வழியில் செலுத்துதல் ஆகியவற்றை மாணவர்களுக்கு கல்லுாரி ஆசிரியர்களே போதிக்கின்றனர்.மாணவர்களின் தனித் திறன்களை கண்டறிதல் ஆசிரியர்களின் பொறுப்பு. கல்லுாரியை பொறுத்தவரையில் மாணவர்களை மையமாகக் கொண்ட வகுப்பறையே சிறந்தது. அதுவே மாணவர்களை சிந்திக்கவும் செயல்படவும் தூண்டும், இவ்வாறு அவர் பேசினார். ஆங்கிலத் துறைத் தலைவர் டெமினா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை