மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
7 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
7 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்; நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜன.28 வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக இரண்டு மாதங்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தற்போது தை மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக ஜன.23 முதல் 26 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்துள்ளது. அதன்படி நேற்றும், நேற்று முன் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் தைப்பூசத் திருவிழா, குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜன. 25 முதல் 28 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரலாம் என்பதால் மேலும் இரண்டு நாட்கள் கூடுதலாக ஜன. 28 வரை தங்களை மலையேற அனுமதிக்க வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago