உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் விளக்கின்றி சிரமம்; குடிநீர் இணைப்பின்றி அவதி வத்திராயிருப்பு பேரூராட்சி 3வது வார்டு சிரமங்கள்

மின் விளக்கின்றி சிரமம்; குடிநீர் இணைப்பின்றி அவதி வத்திராயிருப்பு பேரூராட்சி 3வது வார்டு சிரமங்கள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பேரூராட்சி 3வது வார்டில் ஆண்கள் சுகாதார வளாகத்திற்கு செல்லும் வழியில் மின் விளக்குகள் இல்லாமல் இருட்டு, புதிய குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பின்றி அவதி, கொசுத்தொல்லை, சேதமடைந்த சிமென்ட் ரோடு போன்ற பிரச்னைகளால் அப்போது மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் மெயின் ரோட்டில் ஸ்டேட் வங்கி வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த வார்டில் 200க்கும் மேற்பட்ட வீடுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கின்றனர்.தெருவில் பேவர் ப்ளாக் ரோடுகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், விடுபட்ட குறுகிய தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.தெருவின் கடைசி பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் சுகாதார வளாகத்திற்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் இருண்டு காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் ஏற்பட்டு வருகிறது.அப்பகுதியில் பாழடைந்து பயன்பாடு இல்லாமல் காணப்படும் சுகாதார வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறுக்குத் தெருவில் சேதமடைந்த சிமென்ட் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது.புதிய குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.இத்தகைய குறைகளை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்பது இந்த வார்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தேவை மின் விளக்குகள்

கவுதம், குடியிருப்பாளர்: சுகாதார வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள மின்கம்பங்களில் மின் விளக்குகள் இல்லாமல் இருண்டு காணப்படுகிறது. இங்கு மின்விளக்குகள் பொருத்துவது உடனடி தேவையாகும்.

-தேவை குடிநீர் இணைப்புகள்

-கருப்பசாமி, குடியிருப்பாளர்: இந்த வார்டின் பல்வேறு புதிய குடியிருப்புகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே புதிய வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்புகள் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை பேவர் பிளாக் ரோடு

-கிருஷ்ணசாமி, குடியிருப்பாளர்: தெருவில் இருந்து ஆண்கள் சுகாதார வளாகத்திற்கு செல்லும் மண் பாதையில் விடுபட்ட பகுதியில் பேவர் பிளாக்ரோடு அமைக்க வேண்டும். வாறுகால் கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை