மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 minutes ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்ட ஊராட்சி 3வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கணேசன், நேற்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். இதனையடுத்து மேலும் சில அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர்களை இழுத்து அ.தி.மு.க., வசமுள்ள விருதுநகர் மாவட்ட ஊராட்சியை கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க., எம்,எல்,ஏ,, மான்ராஜ், அவரது மனைவி மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி ஆகியோர் மீது மாவட்ட கவுன்சிலர் கணேசன் அதிருப்தியில் இருந்தார். சில வாரங்களுக்கு முன்பு தனக்கு மான்ராஜ் கொலை மிரட்டல் விடுத்தாக கணேசனின் புகார் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று மாலை விருதுநகரில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து, தி.மு.க.,வில் கணேசன் சேர்ந்தார். விருதுநகர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் உள்ள 20 வார்டுகளில் அ.தி.மு.க.,11, தி.மு.க., 8, ஒரு காலியிடமும் உள்ளது. இந்நிலையில் கணேசன் தி.மு.க.,வில் சேர்ந்ததன் மூலம் தி.மு.க., கவுன்சிலர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சில அ.தி.மு.க., கவுன்சிலர்களையும் இழுத்து மாவட்ட ஊராட்சியை கைப்பற்ற தி.மு.க., திட்டமிட்டுள்ளது. தி.மு.க.,வில் சேர்ந்த கணேசன் கூறியதாவது, எனது வார்டுக்கு நிதி ஒதுக்க மறுக்கப்படுகிறது. கொலை மிரட்டல் விடப்படுகிறது. மான்ராஜ் மீதான வழக்கை வாபஸ் வாங்க சொல்கிறார்கள். இத்தகைய நெருக்கடி காரணமாக தி.மு.க.,வில் சேர்ந்து விட்டேன். மேலும் 3 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தி.மு.க.விற்கு வர உள்ளனர், என்றார்.
3 minutes ago
4 minutes ago