சர்வீஸ் ரோட்டில் சுற்றித் திரியும் நாய்களால் விபத்து அபாயம்
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகம் உள்ள சர்வீஸ் ரோட்டில் சுற்றித் திரியும் நாய்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் பாலப் பணிகள் பிப். முதல் துவங்கி நடந்து வருகிறது. இதனால் சர்வீஸ் ரோடுகளின் இருபுறமும் வாகனங்கள் சென்று வருகின்றன. நாய் தொல்லை எல்லா பகுதிகளிலும் பரவலாக அதிகரித்துள்ளது போல் கலெக்டர் அலுவலகத்திலும் அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சர்வீஸ் ரோட்டில் சுற்றி திரிவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் சர்வீஸ் ரோடு ஏற்கனவே இடநெரிசல் மிகுந்ததாக காணப்படுகிறது. இந்நிலையில் குறுக்கே டூவீலர்களோ, கார்களோ வந்தால் அவை மோதி அருகே வரும் சக வாகன ஓட்டிகளையும் விபத்துக்குள்ளாக்கும். தமிழக அரசு நாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் விருதுநகரில்நகராட்சி பகுதியை போன்றே வளர்ந்து வரும் நகரப்பகுதியாக கூரைக்குண்டு உள்ளதால் இங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பால பணிகள் நடப்பதால் வாகன நெரிசலில் அசம்பாவிதம் நடப்பதை தடுக்க வேண்டும்.