உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடைத்தரகர்களை அணுக வேண்டாம் சிவகாசி மேயர் சங்கீதா தகவல்

இடைத்தரகர்களை அணுக வேண்டாம் சிவகாசி மேயர் சங்கீதா தகவல்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா செய்தி குறிப்பு: சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் கொடுக்கப்படும் பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது.இனி வரும் காலத்தில் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை புதிய சொத்து வரி, காலி மனை தீர்வை, பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்புக்கான முகாம் நடைபெற உள்ளது.இதற்கு உரிய ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாரர் நேரில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதில் இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம். விண்ணப்பித்த விண்ணப்பங்கள் நேராய்வு செய்து மறுவாரம் புதன்கிழமை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை