உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இணைய வழி மூலம் ஏமாற வேண்டாம்

இணைய வழி மூலம் ஏமாற வேண்டாம்

விருதுநகர் : கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி முகநுால் பக்கம் உருவாக்கி, அதன் மூலம் பணம் கேட்பதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. இது முற்றிலும் இணையவழி திருடர்களின் வேலையாகும். ஏற்கனவே இதுபோன்று பல கலெக்டர், உயர் அதிகாரிகளின் பெயரில் போலி முகநுால் பக்கங்கள் உருவாக்கி பணம் பெற்று ஏமாற்றி யுள்ளனர். இதுபோன்ற போலியான முகநூல் பக்கத்திலிருந்து யாராவது பணம் கேட்டால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் இணைய வழியாக யாரேனும் கடன் தருவதாகவோ, பரிசு விழுந்துள்ளதாகவும் அதற்கு முன்பணம் கட்டவேண்டும் என்றோ, வெளிநாட்டிலிருந்து பரிசு வந்துள்ளது என தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டால் அதனை நம்பவேண்டாம். இவை அனைத்தும் இணையவழி திருடர்களின் வேலை யாகும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி