சிவகாசி புது ரோட்டில் குழாய் உடைந்து வீணாகுது குடிநீர்
சிவகாசி,: சிவகாசி புது ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாக ரோட்டில் ஓடுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்த குழாய் தேரடி முக்கிலிருந்து புது ரோடு வழியாக செல்கிறது. இந்நிலையில் புது ரோட்டில் நடுவில் குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது.குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். நடந்து செல்பவர்கள் மீது வாகனங்களால் அடிக்கும் தண்ணீர் தெறிக்கின்றது. சிவகாசியில் பொதுவாகவே பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழாய் உடைந்த இடத்தில் ரோடு சேதம் அடைந்து விட்டது. எனவே உடனடியாக சேதமடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.