உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கல் காந்திஜி நகரில் தெருவின் நடுவில் மின்கம்பங்கள்

திருத்தங்கல் காந்திஜி நகரில் தெருவின் நடுவில் மின்கம்பங்கள்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் காந்திஜி நகரில் தெருவின் நடுவில் உள்ள மின் கம்பங்களால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.திருத்தங்கல் காந்திஜி நகரில் தெருவில் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெருவில் அனைத்து மின் கம்பங்களும் நடுரோட்டில் உள்ளது. இதனால் டூவீலர்களே எளிதில் செல்ல முடியவில்லை. கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் வருவதற்கும் வழி இல்லை. இதனால் ஆட்டோ கூட தெருவிற்குள் வர முடியவில்லை. மேலும் ஏதேனும் இறப்பு நேரிடும் போது உடலைக் கொண்டு செல்வதற்கும் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வீடுகளின் கட்டுமான பொருட்களை மெயின் ரோட்டிலேயே இறக்கி அங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றது. எனவே இப்பகுதியில் நடுரோட்டில் அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை