உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேலைவாய்ப்பு  பயிற்சி கூட்டம்

வேலைவாய்ப்பு  பயிற்சி கூட்டம்

விருதுநகர் : அருப்புக்கோட்டை நோபிள் கலை கல்லுாரியில் நோபிள் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பிற்கு பிறகு என்ன செய்வது என்னும் தலைப்பில் வழிகாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் மாணவி நிலோபர் நிஷா வரவேற்றார். முதல்வர் வேல்மணி வாழ்த்தினார். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சென்னை ரிலெவண்ட்ஸ் டெக்னாலஜி மேலாளர் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கி அதற்கான பயிற்சியை துவக்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பத்துறையை முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சியை வழங்கினார். மாணவி பிரின்ஸி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை