மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
7 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
7 hour(s) ago
விருதுநகர், : விருதுநகரின் சூலக்கரை ஷத்திரிய வித்யசாலா ஆங்கில பள்ளியில் விருதுநகர் பீ ஹைவ் கம்யூனிகேசன் கிளப், டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப்பு இணைந்து நீண்ட நேர ஆங்கில மாரத்தான் மூலம் உலக சாதனையை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான நிகழ்ச்சி நடந்தது.மாநில அளவில் நடந்த நிகழ்ச்சியில் 70 பள்ளி, கல்லுாரிகளை சார்ந்த 1000 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஒரு மாணவருக்கு ஒரு சொல் எனவும், அதற்கான விளக்கத்தை கூறி மொத்தம் 12 மணி நேரத்திற்கு அதிகமாக தொடர்ச்சியாக பேசினர்.இந்த நிகழ்ச்சியில் இந்திய சாதனை புத்தகத்தின் இயக்குநர் கவிதா ஜெயின் கலந்து கொண்டு பதிவு செய்து, உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கிளப் நிர்வாகிகள் ஷியாமர்ராஜ், ரேவதி, பள்ளி செயலாளர் பாலமுருகன் செய்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago