மேலும் செய்திகள்
பன்றிகள் நடமாட்டம் நோய் பரவும் அபாயம்
30-Sep-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் இரவு நேரங்களில் வீடுகளில் பன்றிகள் அட்டூழியம் செய்வதாலும், இவற்றால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. பன்றிகளை கட்டுப்படுத்த ஊராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கஞ்சநாயக்கன்பட்டி. ஊரில் பன்றிகள் சர்வ சுதந்திரமாக தெருக்களில் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இவற்றை வளர்ப்பவர்கள் இதை கட்டுப்படுத்துவது இல்லை. குப்பைகளை கிளறுவதும், இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்தும் மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன. இதுகுறித்து மக்கள், பன்றிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. பன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
30-Sep-2025