மேலும் செய்திகள்
வணிக வளாகத்திற்கு சீல்
24-Apr-2025
சாத்துார்: சாத்துாரில் இடிக்கப்பட்ட நகராட்சி வணிக வளாகத்தை மீண்டும் கட்டித்தர வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சேதமான வணிக வளாகத்தில் வாடகைக்கு இருந்த வியாபாரிகளை காலி செய்ய வலியுறுத்திய நகராட்சி நிர்வாகம் கடைகளை காலி செய்ய வைத்து இடித்தது. தற்போது இங்கு வாடகைக்கு இருந்த வியாபாரிகள் சாலை ஓர வியாபாரிகளாக மாறிவிட்டனர். தகர கொட்டகை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.பலத்த காற்றுடன் மழை பெய்யும் போது வியாபாரிகளின் பொருட்கள் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே கடைகள் இடித்து அகற்றப்பட்ட இடத்தில் விரைவாக புதிய வணிக வளாகத்தை கட்டி வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் என வியாபாரிகள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Apr-2025