உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் ஏற்றுமதிகளை அதிகரிக்கலாம்; வேளாண் வணிகத்துறை ஆணையர் தகவல்

புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் ஏற்றுமதிகளை அதிகரிக்கலாம்; வேளாண் வணிகத்துறை ஆணையர் தகவல்

விருதுநகர் : புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சந்தைப்படுத்துவதால் ஏற்றுமதி அளவை அதிகரிக்கலாம் என விருதுநகரில் நடந்த வணிக இணைப்புக்கூட்டம் வேளாண் விற்பனை, வணிகத்துறை ஆணையர் ஆபிரகாம் தெரிவித்தார். விருதுநகரில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை சார்பில், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி குறித்த பயிற்சி, உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், அசோகன் முன்னிலை வகித்தார். வேளாண் வணிக ஆணையர் கூறியதாவது: புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சந்தைப்படுத்துவதால் அதன் தேவை, ஏற்றுமதி அளவை அதிகரிக்கலாம். மாநிலத்தின் தனித்துவமான 40 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருது நகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகிய 7 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இவற்றை சந்தைப்படுத்துவதால் ஏற்றுமதிகளை அதிகரித்து, மிகப்பெரிய அந்நிய செலவாணியை ஈட்ட முடியும், என்றார். வேளாண் இணை இயக்குநர் சுமதி, ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் சோபனா, வேளாண் ஏற்று மதி மேம்பாட்டு கழக முத்த மேலாளர் பரத்குமார், இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிலையம் சீனிவாஸ், உணவு அறிவியல் துறை, தாவர சுகாதார மையத்தின் அலுவலர் ஸ்ரீ ஹர்சா உள்ளிட்டோர் பேசினர். நகராட்சி தலைவர் மாதவன், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் சுபா வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை