உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கடைக்கு அபராதம் விதித்த போலி உணவு பாதுகாப்பு அலுவலர் பிடிபட்டார்

 கடைக்கு அபராதம் விதித்த போலி உணவு பாதுகாப்பு அலுவலர் பிடிபட்டார்

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உணவு பாதுகாப்பு அலுவலர் என்று கூறி ரூ.7025 அபராதம் விதிப்பதாக கூறி சுவீட்ஸ் கடையில் பணம் பறித்த லாரி டிரைவர் வேல்முருகன் 50, பிடிபட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள நிலா சுவீட்ஸ் ஸ்டாலில், வேல்முருகன் என்பவர் எள் உருண்டை வாங்கினார். தன்னை உணவு பாதுகாப்பு அலுவலர் என்று அறிமுகப் படுத்தி, தயாரிப்பின் தரம் சரியில்லை, ரூ.7025 அபராதம் விதிப்பதாகக் கூறினார். அதை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், வேல்முருகன் போலி உணவு பாதுகாப்பு அலுவலர் என்பது தெரிந்தது. விசாரித்ததில் மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் தான் இந்த வேல்முருகன் என தெரிந்தது. அவர் மீது அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ