உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உரம், மூலிகை மருந்து தயாரிக்க பயன்படும் கொழுஞ்சி செடிகள் சேகரிப்பு பணியில் விவசாயிகள்

உரம், மூலிகை மருந்து தயாரிக்க பயன்படும் கொழுஞ்சி செடிகள் சேகரிப்பு பணியில் விவசாயிகள்

காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் முளைத்து கிடக்கும் கொழுஞ்சி செடிகள் உரம், மூலிகை மருந்துகள் தயாரிக்க பயன்படுவதால் விவசாயிகள் பலர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காரியாபட்டி பகுதி முழுக்க விவசாயத்தை நம்பி உள்ளன. காட்டுப் பகுதியில் முளைத்து கிடக்கும் கொழுஞ்சி செடிகளை வயல்களில் உரமாக பயன்படுத்தி, விவசாயம் செய்தனர். நல்ல மகசூல் கிடைப்பதுடன், மண்வளம் பாதுகாப்பாக இருந்தது. மழை அளவு குறைந்து, வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் பலர் கைவிட்டனர். அதற்குப்பின் செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயத்தை தொடர்ந்தனர். நாளடைவில் மண்வளம் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாமல், பெரும்பாலான நிலங்களை தரிசாக போட்டனர். மீண்டும் விவசாயத்ைத தொடர ஆர்வமான விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர். காரியாபட்டி எஸ்.மறைக்குளம், தேனூர், உவர்குளம் பகுதியில் தானாக முளைத்து கிடக்கும் கொழுஞ்சி செடிகளை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். உரமாக பயன்படுத்தும் போது, மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன் அதிக மகசூல் கிடைக்கிறது. இதில் மருத்துவ குணங்கள் அடங்கி இருப்பதால் விற்பனை செய்ய பலர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சக்தி, விவசாயி, கூறுகையில்: கொழுஞ்சி செடி உரம் போல் வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இயற்கையான உரம். மகசூல் நன்றாக இருக்கும். பயிர்கள் செல்வ செழிப்பாக வளரும். இது தானாக வளரக்கூடியது. கிலோ ரூ. 60 முதல் 70 வரை விற்பனை செய்யப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை