உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒன்றிய அலுவலகம்முன் உண்ணாவிரதம்

ஒன்றிய அலுவலகம்முன் உண்ணாவிரதம்

விருதுநகர் : விருதுநகர் மெட்டுக்குண்டை சேர்ந்த மல்லிகா, வாசுதேவன் என்ற முதிய தம்பதி அரசுக்கு தானமாக வழங்கிய நிலத்தை திரும்ப வழங்க கோரி ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தனர்.விருதுநகர் மெட்டுக்குண்டை சேர்ந்த மல்லிகா, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: எனது கணவர் வாசுதேவன் படிப்பறிவு இல்லாதவர். தனது 1997ல் விவசாய நிலத்தை தான பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். எந்த ஒரு பிரதி பலனும் அரசாங்கத்திடம் பெறவில்லை. ஆனால் அரசு அந்த இடமும் மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இன்று வரை எனது கணவர் பெயரில் தான் பட்டா உள்ளது. அந்த நிலத்தில் வி.ஏ.ஓ., உதவியுடன் கிராவல் மண் அள்ளப்பட்டுள்ளது. எனக்கு வயதாகி விட்டது. வாழ்வா சாவா என்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறேன். குடும்பம் வறுமையில் உள்ளது. எங்களை நிலத்தை திருப்பி வழங்க வேண்டும், என கேட்டுள்ளார்.பி.டி.ஓ., ராஜசேகர், கலெக்டரிடம் கோரிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார். இருப்பினும் தீர்வு கிடைக்காததால் காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி