மேலும் செய்திகள்
கொலை வழக்கில் நால்வருக்கு 'ஆயுள்'
20-Jan-2025
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல பணம் தராத தந்தை வேல்முருகன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் முத்துப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிவகாசி ராம நாடார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 47. தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி, 40. இத்தம்பதிக்கு தலா 2 மகள், மகன்கள் உள்ளனர்.2019 மே 17 இரவு வேல்முருகன் வீட்டில் இருந்தபோது அவரது மகன் முத்துப்பாண்டி 19, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்த நிலையில் டூவீலரில் இருந்த பெட்ரோலை எடுத்து, தந்தை மீது ஊற்றி தீ வைத்து எரித்து முத்துப்பாண்டி கொலை செய்துள்ளார்.சிவகாசி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் முத்துப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.
20-Jan-2025