உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடிந்து விழும் நிலையில் மேல்நிலை தொட்டி நீர் கசிவால் அச்சம்

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை தொட்டி நீர் கசிவால் அச்சம்

காரியாபட்டி: காரியாபட்டி கழுவனச்சேரியில் 40 ஆண்டுகள் பழமையான நீர் தேக்க மேல்நிலைத் தொட்டி சேதமடைந்துள்ளதால் நீர் கசிவு ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.காரியாபட்டி கழுவனச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு முன் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. நாளடைவில் தொட்டி சேதம் அடைந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுகின்றன. கம்பிகள் துருப்பிடித்து, வலுவிழந்து காணப்படுகிறது. தற்போது நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. முழு கொள்ளளவில் நீர் நிரப்பும்போது தாக்குப் பிடிக்க முடியாமல் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அச்சத்துடன் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம் கிராம மக்களிடையே உள்ளது.தற்போது வரை தொட்டி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தண்ணீர் பிடிக்க எந்த நேரமும் மக்கள் கூட்டம் இருக்கும். தண்ணீர் பிடிக்கும் போது அச்சத்துடன் பிடித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள், மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்தி புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை