உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மெட்டல் பவுடர் ஆலையில் தீ

மெட்டல் பவுடர் ஆலையில் தீ

விருதுநகர்:விருதுநகரில் பட்டாசு ஆலைக்கு அனுப்பும் மூலப்பொருளான மெட்டல் பவுடர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் நெல்சன். இவருக்கு சொந்தமாக மாத்தநாயக்கன்பட்டி ரோட்டில் மெட்டல் பவுடர் ஆலை உள்ளது. இங்கு அலுமினியம், பொட்டாஷ் அரைத்து பட்டாசு ஆலைக்கு தேவையான மூலப்பொருளான மெட்டல் பவுடராக அனுப்புகின்றனர். நேற்று காலை ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மெஷின்களில் உராய்வால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மிஷின்கள், கட்டடம் சேதமானது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !