உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சாத்துார்: சாத்துார் அருகே படந்தாலில் தீப்பெட்டிஆலையில் குச்சி உராய்வால் தீ விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.சாத்துாரை சேர்ந்தவர் தீப்தி ஜெயின், 45.இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை படந்தால் வைகோ நகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். ஆலையை மூடுவதற்கு காவலாளி கழிவு குச்சிகளை விளக்குமாரால் தள்ளிய போது தீக்குச்சிகளுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.பண்டல் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த தீக்குச்சிகள் பெட்டிகள் தயாரான தீப்பெட்டி பண்டல்கள் தீயில் எரிந்து கருகின. சாத்துார் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்தனர்.இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை சாத்துார்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ