மேலும் செய்திகள்
ரோட்டில் கோடு போடும் இயந்திரத்தில் தீ
24-Jul-2025
சாத்துார் : சாத்துார் பெரியார் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 38. இவருக்கு சொந்தமான இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை வெங்கடாஜலபுரம் கிராமத்தில் உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணியளவில் தொழிற்சாலைக்கு வெளியில் கொட்டப்பட்ட கழிவு குச்சிகளில் உராய்வு காரணமாக தீப் பற்றியது. காற்று பலமாக வீசியதால் நெருப்பு ஆலை முழுவதும் பரவியது. தொழிற்சாலையில் இருந்த தீக்குச்சிகள், இயந்திரத்தில் தீ பரவியது. சிவகாசி சாத்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jul-2025