உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீயணைப்பு துறை ஒத்திகை பயிற்சி

தீயணைப்பு துறை ஒத்திகை பயிற்சி

விருதுநகர் : விருதுநகரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காத்தல், குறைத்தல் தீயணைப்பு மாதிரி ஒத்திகை பயிற்சியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.தீ விபத்தின் வகைகள் குறித்தும், அதை ஆரம்ப நிலையில் தடுக்கும் முறைகள் குறித்தும், பெரும் தீ விபத்துக்கள், ஆயில் தீ விபத்துக்களை எவ்வாறு தீயணைப்பு ஊர்திகளை கொண்டு எளிதில் அணைப்பது, விளக்க உரை, செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.மேலும் அவசர கால மீட்பு ஊர்தியில் உள்ள மீட்பு கருவிகளான மகிட்டா ஷா அல்லது பவர் ஷா கட்டர் ரூ ஸ்பிரிட்டர், அயன் கட்டர், கான்கிரீட் கட்டர், ஹைட்ராலிக் கட்டர் அண்ட் ஸ்பிரட்டர், மேனுவல் கட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, ஏர் லிப்டிங் பேக், டெலஸ்கோபி லேடார், ரப்பர் படகு தீயணைப்பான்கள் போன்ற செயல்படும் விதங்கள் பற்றியும் மீட்பு முறைகள் பற்றியும் செய்து காண்பிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை