உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலை வெடி விபத்து உரிமம் தற்காலிகமாக ரத்து

பட்டாசு ஆலை வெடி விபத்து உரிமம் தற்காலிகமாக ரத்து

சிவகாசி: சிவகாசி அருகே போடுரெட்டியபட்டி பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆலையின் உற்பத்தி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் போர்மேனை கைது செய்தனர். சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியில் சென்னை உரிமம் பெற்ற ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நீராத்திலிங்கம் பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த சுரேஷ் 38, பலியானார். திருத்தங்கலை சேர்ந்த பால்பாண்டி காயமடைந்தார். இந்த பட்டாசு ஆலையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், போர்மேன் சரியாக மேற்பார்வை செய்யாமல், உற்பத்தி செய்த பட்டாசுகளை இருப்பு வைக்கும் அறையில் விதிமீறி பட்டாசு உற்பத்தி செய்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக பணியாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்து, மரத்தடியில் பட்டாசுகளை காய வைத்து இருந்ததாக மாரனேரி போலீசார், உரிமையாளர், போர்மேன் பள்ளபட்டியை சேர்ந்த குமார் மீது வெடிபொருள் பாதுகாப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். பட்டாசு ஆலையின் உற்பத்தி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ