மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
சாத்துார்:விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் கதிரேசன், 55, என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ரவீந்திரா பட்டாசு ஆலை சிந்தப்பள்ளியில் உள்ளது.ஆலையில், 60க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேற்று மதியம், 12:40 மணிக்கு பேன்சி பட்டாசுக்கு மணி மருந்து செலுத்தும் பணி நடந்தது.பணியில் ஒத்தையாலை சேர்ந்த அஜித்குமார், 23, ஈடுபட்டிருந்தார். மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடித்தது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.ஆலையில் இருந்த, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தப்பி ஓடினர். விபத்தில், வேறு யாரும் காயமடையவில்லை. சாத்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். டி.எஸ்.பி., வினோஜி, தாசில்தார் லோகநாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago