மேலும் செய்திகள்
அன்னை ஆலயத்தில் இன்று தேர்பவனி
19-Sep-2025
விருதுநகர் :விருதுநகர் நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்.11ல் தேர்பவனி நடக்கிறது. ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம் பாதிரியார் அந்தோணிசாமி தலைமையில் மதுரை பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மரிய அருள் செல்வம், சதங்கை கலை தொடர்பு மைய இயக்குனர் அலெக்ஸ் ஞானராஜ் ஆகியோர் கொடியேற்றினர். இங்கு தினசரி நவநாள் திருப்பலி நடக்கிறது. இத்திருவிழா தேர்பவனி அக்.11ல் மாலையில் மதுரை தமிழக ஆயர் பேரவை சட்டப்பிரிவு வழக்கறிஞர்கள் ஜான் கென்னடி, சவரிமுத்து துவக்கி வைக்கின்றனர். மறுநாள் (அக். 12) நன்றி திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் அந்தோணிசாமி, அருட்ணி பேரவை நிதிக்குழு, அருட்சகோதரிகள், மக்கள் செய்கின்றனர்.
19-Sep-2025