சத்துணவு ஊழியர் ஊர்வலம்
விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாநில மாநாட்டு ஊர்வலம் மாநிலத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. இந்த ஊர்வலம் தேசபந்து மைதானத்தில் துவங்கி பஜார், வாடியான் தெரு வழியாக நகராட்சி பூங்காவில் நிறைவடைந்தது.இதில் நுால் மில் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் நாராயணன், வரவேற்புக்குழு தலைவர் வைரவன், பொதுச் செயலாளர் நுார்ஜஹான், அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்க பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வரவேற்புக்குழு செயலாளர் சுதந்திரகிளாரா உள்பட பலர் பங்கேற்றனர்.