முன்னாள் அமைச்சர் மனு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் சுகபுத்ராவிடம் மனு அளித்தார். மேலும் ஆங்காங்கே அதிகார துஷ்பிரயோகம் நடந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் நடுநிலையோடு செயல்பட வலியுறுத்தினார்.