மேலும் செய்திகள்
கள்ள நோட்டு வழக்கு; கேரளா நபருக்கு 5 ஆண்டு சிறை
31-Oct-2025
சாத்துார்:சாத்துார் போலீசாரை தாக்கிய வழக்கில் 4 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாத்துார் அருகே 2019ல் பஸ்சில் பயணம் செய்த இறவார்பட்டி ,- கோபாலபுரம் மாணவர்களிடையே பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் இறவார்பட்டியை சேர்ந்த 37 பேர், கோபாலபுரம் மக்களை தாக்க சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பிரிவை சேர்ந்த போலீசார் அய்யாச்சாமி, பாண்டியராஜ் ஆகியோர் தடுத்ததால் அவர்களை தாக்கினர். இதில் போலீசார் இருவரும் காயமடைந்தனர். சாத்துார் போலீசார் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் இரு சிறுவர்கள் மீது சிறுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து அவர்கள் விடுதலை ஆகி விட்டனர். வழக்கு நடந்து வந்த காலகட்டத்தில் 4 பேர் இறந்து விட்டனர். மீதம் 31 பேர் மீது சாத்துார் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இறவார்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் போஸ் 34, முத்துப்பாண்டி 30, சக்திவேல் 40 , சுரேஷ் 29 ,ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் மற்றவர்களை விடுதலை செய்தும் நீதிபதி முத்து மகாராஜன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் முருகன் ஆஜரானார்.
31-Oct-2025