ஆக.22ல் இலவச செவிப்புலன் பரிசோதனை முகாம்
விருதுநகர்; விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையம், சென்னை இ.என்.டி., ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து 6 வயதுக்குட்பட்ட பிறவி காது கேளாமைக்கான இலவச செவிப்புலன் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை பரிசோதனை முகாம் ஆக. 22ல் காலை 9:00 மணிக்கு நடக்கிறது. பாதிப்புகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தேவைப்படுபவர்களுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.