இலவச மருத்துவ முகாம்
சிவகாசி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 104 வது நிறுவன தினத்தை முன்னிட்டு சிவகாசி வங்கி கிளையில் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. கிளை மேலாளர் கணேஷ் குமார், துணை மேலாளர் மீனாட்சி சுந்தரம், மூத்த மேலாளர் சதிஷ் சரவணன் மருத்துவ துவக்கி வைத்தனர். மதி குழுமம் மருத்துவ இயக்குநர் டாக்டர் மகேந்திர சேகர், நிர்வாக இயக்குநர் திலகபாமா தலைமை வகித்தனர். டாக்டர்கள் சாய் சினேகா மனிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.