மேம்பாலத்தில் செல்பி: இருவர் கைது
விருதுநகர்: விருதுநகர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஆசிப் அஹ்ரம் 26, ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் மூக்கையா 24. இவர்கள் நேற்று அதிகாலை 2:15 மணிக்கு விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர். இவர்களை விருதுநகர் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கண்டித்தார். ஆனால் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்பி எடுக்க முயன்றதால் இருவரையும் மேற்கு போலீசார் கைது செய்தனர். கஞ்சா: மூவர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ்,26, கேசவன், 23, முத்துக்குமார்,25, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 60 கிராம் கஞ்சாவையும், பயன்படுத்திய ஆட்டோவையும் மம்சாபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். பெண் தற்கொலை
சிவகாசி: சிவகாசி மாரனேரி குலாலர் தெருவை சேர்ந்தவர் வீரபையம்மாள் 37. மாற்றுத்திறனாளியான இவரால் கடினமான வேலை எதுவும் செய்ய முடியாது. இதனால் மன வருத்தத்தில் இருந்தவர் வீட்டில் இருந்த மாத்திரை களை அதிகஅளவில் சாப்பிட்டார். விருதுநகர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு இறந்தார். ----பெண் பலி
ராஜபாளையம்: சேத்துார் ஊரணி தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி 54, ராஜபாளையம் ஜெயஜோதி ஸ்பின்னிங் மில்லில் பஞ்சினை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பஞ்சு பேல்களை துாக்கி வரும் போர்க் லிப்ட் வாகனம் சரஸ்வதி மீது ஏறி இறங்கியது. இதில் காயமடைந்த அவர் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முதியவர் பலி
சாத்துார்: சாத்துார் புதுச்சூரங்குடியை சேர்ந்தவர் சகாயம், 79. ஜூலை 10 ஏழாயிரம்பண்ணை சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினார். கிருஷ்ணாபுரம் விலக்கு அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார். விருதுநகர் மருத்துவக் கல்லுாரியில் ஜூலை15ல் இரவு 9:45 மணிக்கு பலியானார். லோடுமேன் பலி
சாத்துார்: வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் நல்லதம்பி, 30. லோடுமேன் ஜூலை 16 மாலை 4:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர் உடல் நலக்குறைவால் பலியானார். மின்சாரம் தாக்கி பலி
காரியாபட்டி: காரியாபட்டி கழுவனச்சேரியைச் சேர்ந்த வீரு. 45, கொத்தனார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ஸ்விட்ச் போர்டில் ஹோல்டர் மாட்ட முற்படும்போது மின்சாரம் தாக்கி பலியானார்.