உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோர ஓடையில் எரிக்கப்படும் குப்பை

ரோட்டோர ஓடையில் எரிக்கப்படும் குப்பை

சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் ரோட்டில் பூலாவூரணி ஊராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகரில் ஓடையில் குப்பை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கில் இருந்து சித்துராஜபுரம் செல்லும் ரோட்டில் பூலாவூரணி ஊராட்சி பிருந்தாவனம் நகர் அருகே ஓடை செல்கிறது. இந்த ஓடையில் அப்பகுதியின் ஒட்டுமொத்த குப்பையும் கொட்டப்படுகின்றது. இதனை அகற்றாமல் அங்கேயே வைத்து எரித்து விடுகின்றனர். ரோட்டில் ஓரத்திலேயே எரிக்கப்படுவதால் இதிலிருந்து எழும்பும் புகையால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.புகை ரோடு முழுவதையும் மறைப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுத்தான் செல்ல முடிகிறது. சில நேரங்களில் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மழைக் காலங்களில் ஓடையில் தண்ணீர் வந்தால், துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே ஓடையில் குப்பை கொட்டு வதை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் மறு சுழற்சி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ