உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை சிகிச்சைக்கு கூடுதலாக 20 படுக்கைகள் தனி வார்டுக்கு அறைகள் தயார்

அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை சிகிச்சைக்கு கூடுதலாக 20 படுக்கைகள் தனி வார்டுக்கு அறைகள் தயார்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை பாதிப்பு சிகிச்சைக்காக கூடுதலாக 20 படுக்கைகளுடன் தனி வார்டு துவங்க அறைகள் அமைத்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தினசரி வெளிநோயாளிகளாக 2 ஆயிரம் பேர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் ஒரு மாதத்திற்கு 400 பிரசவங்கள் நடந்த நிலையில் தற்போது அதிகரித்து 600 பிரசவங்கள் வரை நடக்கிறது. மேலும் கர்ப்பப்பை பாதிப்புக்கான சிகிச்சைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தற்போது 30 படுக்கைகளுடன் வார்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் நாளுக்கு நாள் கர்ப்பப்பை பாதிப்பு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் படுக்கைகள் தேவைப் பட்டது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அதே வளாகத்தில் மற்றொரு கட்டடத்தில் அறைகளை தயார் செய்து கூடுதலாக 20 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்க அறைகளை தயார் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ