மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
02-Oct-2024
காரியாபட்டி : நகர்ப்புற வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தேவையான நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கி வருகிறார் என அமைச்சர் நேரு பேசினார்.காரியாபட்டி பேரூராட்சியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் பஸ் ஸ்டாண்டில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகங்கள், கருணாநிதி அலங்கார வளைவு திறப்பு விழா, கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தனர்.அமைச்சர் நேரு பேசியதாவது: நகர்ப்புற வளர்ச்சிக்கு முதல் ஆண்டு ரூ. 24ஆயிரம் கோடி, இந்த ஆண்டு ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கினார். எந்தத் துறைக்கும் இந்த அளவிற்கு நிதி ஒதுக்கி கொடுத்ததில்லை. நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், புதிய வணிக வளாகங்கள், மார்க்கெட் கொண்டுவரப்பட்டுள்ளது.தமிழகத்தில் 25 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சிக்கு தனிக்கவனம் செலுத்தி ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கினார். 5 ஆண்டுகள் நினைவடைவதற்குள் 7.5 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருக்கும்.ஊரக வளர்ச்சித் துறை செயலர் தலைமையில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சியாகவும், நகராட்சிகளை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்துவதற்கு புதிதாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் குருசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேகர், செயல் அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
02-Oct-2024