உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பி.எஸ்.ஆர்., கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் மகேஸ்வரி வரவேற்றார்.சென்னை டாடா கன்சல்டன்சி தொழில்நுட்ப மனித வள தலைவர் சுசீந்திரன், மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது, கல்வி, தொழில் நுட்பம் ஆகிய இரண்டும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். தற்காலத்தில் மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் திறன் மிகவும் அவசியம், இவ்வாறு அவர் பேசினார். மதுரை காமராஜ் பல்கலை தேர்வில் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்வியில் கல்லுாரி முதல்வர் சுரேஷ் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசித்தார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டாளர் கணேஷ் குமார், பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ