உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பள்ளியில் பட்டமளிப்பு விழா

 பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் டாக்டர் அறிவழகி, இயக்குனர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கரிசலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார். ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற நீதிபதி சுந்தர காமேஷ் மார்த்தாண்டம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மாலையில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் துணை கலெக்டர் சாய் பாலாஜி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர். பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் நாச்சியார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி