உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவித்யா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீவித்யா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரியின் 5வது பட்டமளிப்பு விழா கல்விக்குழும தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ் தலைமையில் நடந்தது. கல்விக்குழும அறங்காவலர் கோதை ஆண்டாள், செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் கணேசன் வரவேற்றார். திண்டுக்கல் காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேசுகையில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர் பிச்சை போன்ற சிறந்த மனிதர்களை உதாரணமாகக் கொண்டு பட்டதாரிகள் வெற்றி பெற வேண்டும், என்றார். அவர் பல்கலை தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், இளநிலை பட்டதாரிகள் 189 பேருக்கும், முதுநிலை பட்டதாரிகள் 4 பேருக்கும் பட்டங்களையும் வழங்கினார். அதன் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் பசுபதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர், முதல்வர், ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ