உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வி.பி.எம்.எம்.,கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வி.பி.எம்.எம்.,கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். கல்லூரியில் 26 ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி, துணை தலைவர் தங்க பிரபு முன்னிலை வகித்தனர். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சமீம் ராணி வரவேற்றார்.பல்கலை தேர்வில் தர வரிசை பட்டியலில் இடம் பெற்ற முதுகலை மாணவிகள் 8 பேருக்கு தங்கப்பதக்கமும், 11 மாணவிகளுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கி திருவாரூர் மத்திய பல்கலை பேராசிரியர் பொன் ராஜரத்தினம் பேசினார். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் பழனிவேல் ராஜன் காணொளி மூலம் வாழ்த்தினார். விழாவில் கல்லூரி இயக்குனர் பூர்ணிமா, பொறியியல் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், நர்சிங் கல்லூரி முதல்வர் மணிமேகலை, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை