உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வடக்கு கரிசல் குளத்தில் மரங்கள் நிறைந்த பசுமை ரோடுகள்; முன்னுதாரணமான வடக்கு கரிசல் குளம்

வடக்கு கரிசல் குளத்தில் மரங்கள் நிறைந்த பசுமை ரோடுகள்; முன்னுதாரணமான வடக்கு கரிசல் குளம்

மாசுக்கள் நிறைந்த இன்றைய அறிவியல் உலகில் மரங்களே, மனித சமுதாயத்தை காக்கும் இயற்கை கொடையாக விளங்குகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக விளை நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறி வருகிறது. இதனால் மண்ணில் மாசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மண்ணில் உள்ள ஒவ்வொரு மரங்களும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித சமுதாயத்திற்கு தன்னுடைய உதவியை தந்து உதவுகிறது. தற்போது அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க இருவழிச் சாலைகள் எல்லாம் நான்கு வழி சாலைகளாக மாறி வருகிறது.இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் வெயில் நேரங்களில் ரோட்டில் வெப்பம் அதிகரித்து கார் டயர்கள் வெடித்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது மனித சமுதாயத்திற்கு மரத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.இதனால் தற்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலையின் இரு புறமும் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.ஆனால், இதற்கெல்லாம் முன்னோடியாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தங்களது கிராமத்து ரோட்டின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து இன்று மரங்களாக பசுமை நிறைந்த சாலையாக மாற்றியுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வடக்கு கரிசல்குளம் கிராம மக்கள்.500 மீட்டர் துாரத்திற்குள் 60க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இருபுறமும் முறையாக, சரியான திட்டமிடுதல் நட்டு வளர்க்கப்பட்டதால் இன்று மரத்தின் கிளைகளை குடைபோல் விரிந்து காணப்படுகிறது. வேம்பு, புங்கை உட்பட பல வகை மரங்களை அடர்த்தியாக நட்டு வளர்த்திருப்பது அந்த வழியாக பயணிக்கும் மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.இன்றைய வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைஞர்கள், மாணவர்கள் மரங்கள் வளர்ப்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால் எதிர்கால மனித சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும். ரோட்டில் இருபுறமும் போதிய அளவிற்கு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது மூலம் பசுமை வழிச்சாலைகளை நம்மால் உருவாக்க முடியும்.- - வேலாயுதம், ரோட்டரி நிர்வாகி.நுாற்றாண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் நட்டு வளர்த்த மரக்கன்றுகள் தான் இன்று மரங்களாக மனித சமுதாயத்தின் நலன் காக்கும் இயற்கை கொடையாக விளங்குகிறது. இதே போல் நாமும் எதிர்கால மனித சமுதாய நலன் கருதி ரோடுகள் தோறும் மரங்கள் வளர்ப்பது மிகவும் அவசியம்.- சந்தானம், ஓய்வு வங்கி ஊழியர்.

ரோடுகள் தோறும் மரங்கள்

ரோடுகள் தோறும் மரங்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை