மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
9 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
9 hour(s) ago
ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதி விவசாய சாகுபடி நிலங்களில் பெருகி பரவும் பார்த்தீனிய களைச் செடிகளை கட்டுப்படுத்த தெரியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர். ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி கண்மாய் ஒட்டிய இடங்களில் நெல், வாழை, கரும்பு பயிர்களும் மற்ற இடங்களில் தென்னை, மா உள்ளிட்ட தோப்புகளும் சீசனுக்கு ஏற்ற பயிர்கள் சாகுபடி அதிகம். இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்துள்ள நிலையில் விவசாய தோப்புகளில் தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை. இந்நிலையில் சீரான இடைவெளிகளில் உழவு பணிகள் மேற்கொண்டும் பெய்து வரும் மழையால் களைச் செடிகள் அதிகரித்து வளர்ந்துள்ளன.இவற்றில் கால்நடைகள், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பார்த்தீனிய செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இது தவிர விவசாயம் செய்யாத தரிசு நிலங்களிலும் இவை பல்கி பெருகி பரவலாக காணப்படுகின்றன. பாசன நீர், மழை இவற்றின் மூலம் வேகமாக பரவும் இச்செடியினால் மனிதர்களுக்குசுவாச குழாய் பாதிப்பு தோல் நோய்கள் ஏற்படும். இது தவிர கால்நடைகளுக்கும் பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாவதுடன் நன்மை பயக்கும் களைச் செடிகளுக்கு போட்டியாக வளர்ந்து ஆக்கிரமிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.பார்த்தீனிய களைச் செடிகளை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago