உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரில் கடத்தி பணம் பறிப்பு இருவர் மீது குண்டாஸ்

காரில் கடத்தி பணம் பறிப்பு இருவர் மீது குண்டாஸ்

நரிக்குடி: மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த மைக்கேல் 42. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீரா 55,விற்கு சொந்தமான நரிக்குடி குறுந்தகுளம் பகுதியில் உள்ள 50 ஏக்கர் நிலங்களை வாங்கினார். சென்ற மாதம் மைக்கேல், தந்தை ஆரோக்கியசாமி காரில் சென்று, நிலத்தின் அருகே நின்ற போது, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் அவர்களை அரிவாளால் தாக்கி, இருவரையும் காரில் கடத்தினர். பந்தல்குடி அருகே மைக்கேலை இறக்கிவிட்டு, தந்தையிடம் இருந்த ரூ. 25 ஆயிரம் பணத்தை பறித்தனர். மைக்கேல் பலத்த காயமடைந்தார். திருச்சுழி போலீசார், நரிக்குடி செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த லட்சுமணன் 25, வீரசூரன் 27, உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். லட்சுமணன், வீரசூரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., கண்ணன் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை