மேலும் செய்திகள்
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
10-Oct-2024
விருதுநகர்: சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மனநல மருத்துவமனை, மனநல காப்பகத்தை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக சுகாதாரத்துறை கைவிட வேண்டும் என வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் பேசினர்.
10-Oct-2024