மேலும் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை
18-Sep-2025
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் விருதுநகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. விருதுநகரில் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை செய்யப்பட்டது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில், மாலையில் மழை என சீதோஷ்ண நிலை தொடர்ந்து மாறி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மதியம் கருமேக கூட்டங்கள் உருவாகி மாலையில் மழை பெய்யத்துவங்கியது. சாத்துாரில் மாலை 5:45 மணி முதல் சில நிமிடங்கள் மழை பெய்தது. தாயில்பட்டியில் மாலை 4:30 மணி முதல் மாலை 5:45 மணி வரை மிதமான மழை பெய்தது. அருப்புக்கோட்டை, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிப்புத்துார் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ராஜபாளையத்தில் மாலை 5:00 மணி முதல் ஒன்றரை மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. காரியாபட்டி, அதனை சுற்றிய பகுதிகளில் மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை கனமழை பெய்தது. விருதுநகரில் மாலை 4:45 மணி முதல் இரவு 7:00 மணி வரை பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் காந்தி நகர், கே.கே.எஸ்.எஸ்.என். நகர், தினமலர் நகர், வேலுச்சாமி நகர், பெத்தனாட்சி நகர், காவிரி நகர் உள்பட பல பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்பட்டது. மேலும் அரசு டிப்போ சர்வீஸ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் உள்பட பல இடங்களில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினர்.
18-Sep-2025