உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சர்வீஸ் ரோட்டில் வரிசை கட்டி நிற்கும் கனரக வாகனங்கள்: போக்குவரத்திற்கு இடையூறு

சர்வீஸ் ரோட்டில் வரிசை கட்டி நிற்கும் கனரக வாகனங்கள்: போக்குவரத்திற்கு இடையூறு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சர்வீஸ் ரோடு ஓரங்களில் கனரக வாகனங்கள் பல மணி நேரம் வரிசை கட்டி நிற்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை செல்கிறது. இதில் காந்திநகர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த ரோடுகளை பயன்படுத்தி நகருக்குள் செல்ல வசதியாக உள்ளது. செம்பட்டி, தொட்டியாங்குளம், ஆத்திப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதி மக்களும் புறநகர் பகுதி மக்களும் இந்த சர்வீஸ் ரோட்டை பயன்படுத்துவர். தினமும் ஆயிரக்கணக்காக வாகனங்கள் வந்து செல்லும். போக்குவரத்து அதிகம் நிறைந்த இந்த சர்வீஸ் ரோடுகளில் இருபுறமும் கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால் மற்ற வாகனங்களுக்கு இடைஞ்சலாகவும் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதேபோன்று சர்வீஸ் ரோடு ஒட்டி ஒர்க் ஷாப்கள் உள்ளதால் அந்தப் பகுதியிலும் வாகனங்கள் நிற்கின்றன. போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வீஸ் ரோடுகளில் கனரக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை