இளைஞரை தாக்கிய எஸ்.ஐ., ஏட்டு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
நரிக்குடி: 2020ல் வாக்கி டாக்கி காணாமல் போனதாக இளைஞரை தாக்கிய விருதுநகர் அ. முக்குளம் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஏட்டு மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. நரிக்குடி எஸ்.மறைக்குளம் தவக்கண்ணன் 26. பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தார். மார்ச் 21, 2020ல் விசாரணைக்காக அ.முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். எஸ்.ஐ., மணிகண்டன் விசாரித்தார். அன்று இரவு வாக்கி டாக்கி காணாமல் போனது. தவக்கண்ணனை திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தி தாக்கி, வழக்கு போடப்பட்டது. 2024ல் திருச்சுழி கோர்ட் விசாரித்து, பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டதையடுத்து தவக்கண்ணனை விடுதலை செய்தது. பொய் வழக்கு போட்ட எஸ்.ஐ., மணிகண்டன், ஏட்டு செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டில் தவக்கண்ணன் வழக்கு தொடர்ந்தார். விசாரணை செய்த நீதிபதி சுந்தர் மோகன் சென்ற நவ. 17ல் கடுமையாக தாக்கி, பொய் வழக்கு பதிவிட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.