மேலும் செய்திகள்
அனுமந்தபுரம் சாலையில் பள்ளங்களால் ஆபத்து
26-Nov-2024
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வழியாக இருக்கன்குடிக்கு செல்லும் ரோடு பள்ளங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டையில் இருந்து சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம் ஆமணக்குநத்தம், கல்லுப்பட்டி, கோட்டூர் வழியாக இருக்கன்குடி செல்ல ரோடு உள்ளது. இந்த ரோடு கி.மீ., குறைவாக இருப்பதால் இருக்கன் முடி கோயிலுக்கு செல்ல இந்த ரோட்டைத்தான் பயன்படுத்துவர். மேலும் இந்த பகுதியிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி மாணவர்கள் இந்த ரோடு வழியாகத்தான் அருப்புக்கோட்டைக்கு வந்து செல்வர். ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் ரோடுகள் பெயர்ந்தும், சேதம் அடைந்து பள்ளங்களாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த ரோட்டை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Nov-2024