உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோரம் கொட்டப்படும் மருத்துவமனை கழிவுகள்

ரோட்டோரம் கொட்டப்படும் மருத்துவமனை கழிவுகள்

அருப்புக்கோட்டை,: ரோடு ஓரங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுங்கள் ,என அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், இன்ஜினியர் அபுபக்கர் சித்திக், அலுவலர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்

ராமதிலகம், (அ.தி.மு.க.):திருச்சுழி ரோட்டில் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை ரோடு ஓரங்களில் கொட்டுகின்றனர். பட்டாபிராமர் கோயில் அருகில் உள்ள நகராட்சி இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும்.ஜெயகவிதா, (தி.மு.க.,):நகராட்சி மயானத்தில் உள்ள நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டில் 19 தெருக்கள் உள்ளன புறநகர் பகுதிகளும் உள்ளன கூடுதலான தூய்மை பணியாளர்களை துப்புரவு பணிக்கு அனுப்ப வேண்டும்.செந்தில் வேல்(தி.மு.க.): ஜோதிபுரம் பகுதியில் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுகிறது நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுங்கள்.டுவின்கிளின்,(தி.மு.க.):பெரியார் நகர் மற்றும் இக்ரா ஸ்கூல் பகுதியில் புதியதாக ரோடு அமைக்க வேண்டும். மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக நடக்க முடியாமல் உள்ளது.அப்துல் ரகுமான், (தி.மு.க.): ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மெயின் வாறுகாலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சி, (தி.மு.க.,): நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. என்றைக்கு தான் தீரும்.பழனிச்சாமி, துணை தலைவர்: அரசுக்கு இதுகுறித்து கலெக்டர் கோரிக்கை வைத்துள்ளார். அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.சிவபிரகாசம், (தி.மு.க.):அருப்புக்கோட்டைக்கு பாதாள சாக்கடை திட்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் என வளர்ச்சி பணிகள் செய்து கொடுத்த வருவாய்த்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் சிறு விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ